Thursday, 14 August 2014


தரமான நெல் நாற்று உற்பத்தி
ரமான நெல் நாற்றுகளை உற்பத்தி
பிசான நெல் சாகுபடிக்கு தரமான நெல் நாற்றுக்களை உற்பத்தி செய்வது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அளித்துள்ளார். நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வது மிகவும் அவசியம்.

ரகங்களைத் தேர்வு செய்தல்:-

பிசான பருவத்துக்கு ஏற்ற குறுகிய கால 110 முதல் 115 நாள்கள் வயதுடைய அம்பை-16, ஆடுதுறை-36, ஆடுதுறை-45 ரகங்களையும், மத்தியகால, 120-125 நாள்கள் வயதுடைய ஆடுதுறை- 39 ரகங்களைத் தேர்வு செய்து சான்று பெற்ற விதைகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளைப் பெறுவதற்கு 20 கிலோ சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவது அவசியம். திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 3 கிலோ சான்று விதை போதுமானது.

விதை நேர்த்தி:-
விதை மூலம் பரவும் இலைப் புள்ளிநோய், குலைநோய், தூர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது கார்பண்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும், வளிமண்டலத்திலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும் அசோஸ்பைரில்லம் 2 பொட்டலம் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சிக்கு தேவையான மணிச்சத்தை பயிருக்குக் கரைத்து கொடுக்கவல்ல பாஸ்போபாக்டீரியா 2 பொட்டலம் உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்குத் தேவையான 20கிலோ விதையுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.உயிர் உரங்கள் விதையுடன் ஒட்டும் பொருட்டு ஆறிய வடிகஞ்சியை பயன்படுத்த வேண்டும்.

நாற்றங்கால் தேர்வு:-
ஒரு ஏக்கருக்கு நடவு செய்வதற்கு 8 சென்ட் நாற்றங்கால் போதுமானது. திருந்திய நெல் சாகுபடியில் நடவுசெய்ய ஏக்கருக்கு 1 சென்ட் மேட்டுபாத்தி பாய் நாற்றங்கால் போதுமானது.

உர நிர்வாகம்:-
8 சென்ட் நாற்றங்காலுக்கு 1000 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். கடைசி உழவுக்குமுன் 8 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும். அல்லது 16 கிலோ யூரியாவை 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் உடன் கலந்து அடியுரமாக இடலாம்.
களிமண் பாங்கான நிலங்களில் நாற்றுகளை பிடுங்குவதற்கு 10 நாள்களுக்குமுன்னர் ஒரு சென்ட்டுக்கு 4 கிலோ ஜிப்சம் இட வேண்டும். ஜிப்சம் இடுவதால் நாற்றுக்களின் வேர்களை அறுபடாமல் எளிதில் எடுத்துவிடலாம்.

களை நிர்வாகம்:-
நாற்றங்காலில் வரும் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த 3 நாள்களுக்குப் பின்னர், 20 சென்ட் நாற்றங்காலுக்கு பூட்டாகுளோர் 80 கிராம் மருந்தை 2 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.
பூச்சி நோய் நிர்வாகம்: நாற்றங்காலில் வரும் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிரிட் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 மிலி கலந்து தெளிக்கலாம். பூஞ்சான் நோய்களைக் கட்டுப்படுத்த காபென்டாசிம் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

இந்த முறைகளைப் பின்பற்றி வளர்ந்த நாற்றுகளை 20-22 நாள்களில் பறித்து நடவு செய்ய வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையில் 14-15 நாள்கள் வயதுடைய நாற்றுகளை, குத்துக்கு 1-2 நாற்றுகளை 25 செ.மீ.க்கு 25 செ.மீ. என்ற இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். இவ்வாறு நாற்றங்கால் பராமரிப்பு முறைகளைக் கையாண்டு தரமான, வாழிப்பான நாற்றுகளைப் பெற்று அதிக மகசூல் அடையலாம்.
தரமான நெல் நாற்று உற்பத்தி
நெல் இரகங்கள் ஏற்ற பருவம்
நெல் ஒரு சுய மகரந்தச் சேர்க்கைப் பயிர் எனவே தூய இரக விதைகளைப் பெற பிற இரக நெற்பயிர்களிலிருந்து 3மீ (இடைவெளி) பயிர் விலகு தூரம் இருக்க வேண்டும்.

பருவம்:-
குறுகிய காலம் - (105 - 110 நாட்கள்)  நவம்பர் - டிசம்பர்
மத்தியகாலம்   - (110 - 125 நாட்கள்)  நவம்பர்
நீண்ட காலம்   - (125 - 145 நாட்கள்)  ஆகஸ்ட்

விதை ஒரு எக்டர்க்கு :-
குறுகிய காலம் - ஒரு எக்டர்க்கு 60 கிலோ
மத்திய காலம்  - ஒரு எக்டர்க்கு 40 கிலோ
நீண்ட காலம்   - ஒரு எக்டர்க்கு 30 கிலோ
உதாரணத்திற்கு டீலக்ஸ் பொன்னி சாகுபடி பற்றிய பார்வையில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கும் பூச்சிக் கொல்லி விவசாயத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை பாருங்கள்
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்
  
இயற்கை பூச்சி கொல்லிகள்:-

தாவரப் பூச்சிக் கொல்லிகள்:-
தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான
ஆடாதோடா
நொச்சி
எருக்கு
வேம்பு
சோற்றுக் கற்றாழை
எட்டிக் கொட்டை
போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.

ஊறல் முறை:-
நொச்சி
ஆடாதோடா
வேம்பு
எருக்கன்
பீச்சங்கு (உண்ணி முள்)

போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர் 3 லிட்டர் சாணக்கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும்.
இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

வேக வைக்கும் முறை:-
மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு,15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேகவைக்க வேண்டும்.
வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும்.ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில்,100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.




பூசண நோய் கட்டுப்பாட்டு:-
பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.

நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு:-
சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ
இஞ்சி 200 கிராம்
இவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை

2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து,
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.

 
ஜே-13 நெல் வயல்

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ்நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக்கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூர், திருபுவனம் மற்றும் சோழவந்தான் என்ற இடங்களில் செய்கிறார்கள். சில நேரங்களில் கிணற்றுநீர் சற்று குறைந்துவிடுவதும் உண்டு. மதுரை விவசாயிகள் துணிவே துணை என்ற நம்பிக்கையில் சோதனையிலும் சாதனை படைக்கும் நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர். மதுரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகுபடி செய்கிறார்கள்.
 
இந்த ரகத்திற்கு செழிப்பைக் கொடுக்க வயலுக்கு கணிசமான அளவு மக்கிய தொழு உரம் இடுகின்றனர்.
பயிர் வரிசைகளின் இடைவெளிகளிலும் உயிர் உரங்கள், உலர்ந்த தொழு உரக் கலவைகள் இடப்படுகின்றது.
உடனே பயிர் வரிசை இடையில் களையெடுக்கும் கருவிகளை உபயோகிக்கின்றனர். 
 தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட் டால் இந்த ரகம் வறட்சியைத் தாங்கிக் கொள்கிறது.

நடவின் சமயம் 10 கிலோ பொடி செய்யப் பட்ட ஜிங்க் சல்பேட்டினை இடுகின்றனர்.
நடவு நட்ட 15ம் நாள் யூரியா 25 கிலோ அளவினை 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஒரு இரவு வைக்கப்பட்டு மறுநாள் வயலுக்கு இடப்படுகின்றது.
பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்தோடு கலந்து வயலுக்கு இடப்படுகின்றது.

விவசாயிகள் செய்யும் பணிகளால் குறிப்பாக பயிருக்கு திறமையாக களை எடுப்பதால் வேர் வளர்ச்சி ஊக்கப்பட்டு பயிர் அதிக அளவில் தூர்கள் பிடிக்கின்றன. தூர்களில் திரட்சியான கதிர்களும் பிடிக்கின்றன.
ஜே-13 பயிர் வயலில் 75 நாட்கள் தங்கி இருந்து, பயிர் நாற்றுவிட்ட 100வது நாளில் அறுவடைக்கு வந்துவிடுகின்றது.

பயிர் சாகுபடிக்கு ரூ.11,000 லிருந்து 12,000 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். 32 மூட்டை மகசூல் எடுக்கின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20,800 இருக்கும். ஏக்கரில் ரூ.10,000 வரை லாபம் எடுக்கின்றனர்.
 
ஜே-13 நெல், அரிசி, பொரி

ஜே-13 நெல் மிக சன்னம். இதில் அரிசி வெண்மையாக இருக்கும். இட்லி, தோசை போன்ற பலகாரங்கள் செய்ய மிகவும் ஏற்றதாக உள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாக பொரி செய்வதற்கு ஏற்ற ஜே-13 நெல்லினை வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர்.

இந்த ரகத்தில் கணிசமான அளவு வைக்கோல் கிடைக்கின்றது.
நமது நாட்டில் கறவை மாடுகள், கன்றுகள், வண்டிகளை இழுக்கும் வண்டிமாடுகள் போன்றவைகள் உள்ளன. இவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கொடுத்தாலும் அவைகளின் வயிறு நிரம்ப அதிக அளவு வைக்கோலும் அவசியம். வைக்கோல் பஞ்சு போல் இருக்கும். ஜே-13 ரகத்தில் வைக்கோல் அதிக அளவு கிடைப்பதோடு அதன் விலை மற்ற ரகங்களின் வைக்கோலின் விலையைவிட சற்று அதிகமாகும்.

சாகுபடியில் ஒரு சில ரகங்களை குறிப்பிட்ட பட்டத்தில்தான் சுலபமாக சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஜே-13 ரகத்தை எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஆபத்தில் உதவக்கூடிய ஜே-13 ரகம் விவசாயிகளை சோதனை காலங்களில் காப்பாற்றுகின்றது.

100 நாள் ரகம் ஜே-13ம் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் இதை விடாமல் சாகுபடி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, 13 August 2014

மதுரந்தகம் BPT நெல் விலை நிலவரம்

முதல் ரகம் BPT நெல்:-
விலை : 1700 எடை: 79கிலோ (எடைமேடை)

இரண்டாம்  ரகம் BPT நெல்:-
விலை : 1650 எடை: 79கிலோ (எடைமேடை)

வாங்க/விற்க்க தொடர்புக்கு:-
        P.சீத்தாபதி
        PH: (+91) 9444751612
        PADDYExpo மதுரந்தகம்

Auto Slider by label